பெரம்பலூரில் 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.50000 கொள்ளை - நள்ளிரவில் வடமாநில கொள்ளையர்கள் துணிகரம்

Feb 23 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டத்தில், 2 வீடுகளுக்குள் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான நவநீதபால், 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில், முகமூடி அணிந்த வடமாநில கொள்ளையர்கள் 5 பேர், கதவை தட்டி உள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் கதவை திறந்ததும், கத்தி மற்றும் உருட்டுக்கட்டையுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நவநீதபால் உள்ளிட்டவர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு, 15 சவரன் நகை, எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல், அதே ஊரில் வசிக்கும் விவசாயி வீரபத்திரன் என்பவர் வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், வீரபத்திரனை கட்டிப்போட்டுவிட்டு, அவரது மனைவி லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், அரும்பாவூர் கிராமத்தில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டிலும் 15 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00