மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : விழுப்புரம், தருமபுரி, திருச்சி, புதுக்‍கோட்டை, நாகையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி நகரக்‍ கழகம் சார்பில், செஞ்சியில் உள்ள நான்கு முனைச் சந்திப்பு சாலை, மீன் மார்க்கெட், மாதா கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. கெளதம் சாகர், நகரச் செயலாளர் திரு. மில்கா கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக மாணவர் அணி சார்பில், தகடூர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு, போர்வை, தலையணை, காலை உணவு உள்ளிட்ட உதவிகளை, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. டிகே. ராஜேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்டக் கழக மாணவரணி செயலாளர் திரு. பார்த்திபன், கழக அம்மா பேரவை மாநில துணைத் தலைவர் திரு. R. பாலு, தருமபுரி மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தரூபினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், திருச்சி திருவானைக்காவலில் உள்ள கழக அலுவலகத்தில், அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் திரு. இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மத்திய மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில், திருவரங்குளம் கடை வீதியில், ஒன்றியச் செயலாளர் திரு. ஆர்.வி. பொட்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் காசிநாத பாரதி, நாகை மாவட்ட அவைத் தலைவர் திரு. ஆறுமுகம், மாவட்ட பாசறை செயலாளர் திரு. லிங்கேஷ், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு. பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00