மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருப்பூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரத்தில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

வட சென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி 1-வது வட்டச் செயலாளர் திரு. பன்னீர்செல்வம் ஏற்பாட்டின் பேரில், எண்ணூர் தாளம் குப்பம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. சி.பி. ராமஜெயம், மாநில மீனவர் அணி செயலாளர் திரு. டி. ஆறுமுகம், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் திரு. கே. ஏ.குப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர் நகரக் கழகச் செயலாளர் திரு. கே. பிரகாஷ் தலைமையில், அனகாபுத்தூரில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கடலூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பாக, காட்டுமன்னார் கோவிலில் உள்ள அம்மாவின் திருவுருவ சிலைக்கு, மாவட்டச் செயலாளர் திரு. K.S.K. பாலமுருகன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், பாண்டியன் நகர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்​டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாவட்டச் செயலாளர் திரு. சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில், கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் திரு. பாலகிருஷ்ணன், பாண்டியன் நகர் பகுதி கழகச் செயலாளர் திரு. எஸ்.எஸ். ராஜன், மாவட்ட கழக அவை தலைவர் திரு. பாலுசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டக்‍ கழகம் சார்பில், காரைக்குடி அலுவலகத்தில், அம்மாவின் படத்திற்கு, கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டச் செயலாளர் தி. தேர்போகி V. பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அம்மா பேரவை சார்பில், புதுப்பேட்டை எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாவின் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் கழகத்தினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலாளர் திரு. அறிவழகன், மத்திய மாவட்ட பேரவை செயலாளர் திரு. மோசஸ், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. சாபுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் ஒன்றிய கழகம் சார்பில், புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக அமைப்புச் செயலாளர் திரு. ஜி முனியசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் திரு. முக்தீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00