மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : திருப்பூர், செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், ஈரோடு, நாகையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி கழகம் சார்பில், திருமுருகநாதர் கோவில், தேவராயம் பாளையம், ராக்கியா பாளையம், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாவட்டச் செயலாளர் திரு. சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில், கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயலாளர் திரு. கணேசமூர்த்தி, அம்மா பேரவை செயலாளர் திரு. செல்வராஜ், மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. பாலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கழகம் சார்பில், மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. சி.சண்முகவேலு தலைமையில், மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதேபோல், குமரலிங்கம் பேரூராட்சி மற்றும் கணியூர் பேரூராட்சி பகுதிகளில் வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் திரு. ராஜ்குமார், மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், பம்மல் பசும்பொன் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில், அம்மாவின் பிறந்தநாளையொட்டி, 108 பால்குடம் எடுக்‍கப்பட்டது. பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. பம்மல் நகரக் கழக இணைச் செயலாளர் திரு. இரா. லோகநாதன், பம்மல் நகரக் கழகச் செயலாளர் திரு. P. ஜெயகோபி, நகர துணைச் செயலாளர் திரு. ஸ்ரீ விக்னேஷ், நகர பொருளாளர் திரு. கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை புறநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில், வால்பாறை காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் படத்திற்கு, மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக அலுவலகத்தில் வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் படத்திற்கு, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள அம்மாவின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக வழக்கறிஞர் அணி தலைவர் திரு. கு. சீனிவாசன், கழக அம்மா தொழிற் சங்க பேரவை இணைச் செயலாளர் திரு. சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. சக்தி என்கிற சிவசுப்பிரமணியன் தலைமையில், பெருந்துறை தொகுதி காஞ்சிகோயில் பேரூராட்சியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக அவைத் தலைவர் திரு. கே.சி. பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் திரு. எஸ். சிவகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டக் கழகம் சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் R.C.M. மஞ்சுளா சந்திரமோகன், கழக அமைப்புச் செயலாளர் திரு. கிங்ஸ்லி ஜெரால்டு, நகர கழக செயலாளர் திரு. தாடி உலகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00