மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : புதுக்‍கோட்டை, செங்கல்பட்டு, கரூர், தூத்துக்‍குடி, காஞ்சிபுரம், நாகையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மத்திய மாவட்டம் அம்மா பேரவை சார்பில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்‍கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழகத்தினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நகரச் செயலாளர் திரு. வீரமணி, மாவட்டப் பாசறை செயலாளர் திரு. நவநீதன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. முத்தாள் என்ற முத்துக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகத்தினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சித்தாமூர் ஒன்றிய கழக செயலாளர் மேல்மருவத்தூர் திரு. எம்.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கரூர் கிழக்கு மாவட்டம் தோகைமலை மேற்கு ஒன்றிய சார்பில், தோகைமலை பேருந்து நிலையத்தில் வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் படத்திற்கு, மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்ளாப்பட்டி திரு. எஸ். மணிமாறன், தோகமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் பூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே அமைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாவட்டச் செயலாளர் திரு. டி.வி.ஏ.பிரைட்டர் மற்றும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முக குமாரி, மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் சுகந்தி கோமஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி கிரேசி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எட்வின் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டக்‍ கழகம் சார்பில், மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் மொளச்சூர் திரு. இரா.பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. N.V. செல்வம் வாண்டையார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். காரைக்‍கால் மாவட்டக்‍ கழகச் செயலாளர் தர்பான்ஈஸ்வரர், அவைத் தலைவர் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00