மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - சென்னையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேப்பாக்கம் திரு. ராஜேந்திரன் தலைமையில் அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணியின் மாவட்ட செயலாளர் திரு. சரவணன் ஏற்பாட்டில் சேத்துப்பட்டு ஆரிஸ்டன் சாலை சந்திப்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆரயிம் விளக்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. பாபு, மாவட்ட துணை கழக செயலாளர் திரு.கங்கன், 110-வது வட்ட கழக செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென் சென்னை தெற்கு மாவட்டம் மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பில் அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டம் மயிலாப்பூர் பகுதி கழக செயலாளர் மயிலை திரு. அர்சுனன் தலைமையில், அம்மாவின் 73-வது பிறந்தநாளில் அம்மாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மயிலாப்பூர் பகுதி கழக இளைஞர் பாசறை செயலாளர் திரு. செந்தில் குமார் ஏற்பாட்டில் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஆந்திரா மகிளா சபா இல்லத்தில் ஆதரவற்ற மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. குமரவேல் பாண்டியன், கழக பொதுக்‍குழு உறுப்பினர் திரு. மோகன், மீனவரணி பகுதி செயலாளர் திரு. சாலமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை கிழக்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழகம் சார்பில் அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தென்சென்னை கிழக்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் தலைமையில், அம்மாவின் 73-வது பிறந்தநாளில் அம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் 177-வது வடக்கு வட்ட கழக செயலாளர் திரு. ராகுல் ஆனந்த் ஏற்பாட்டில் வேளச்சேரி அம்பேத்கார் நகர், நேரு நகர், சத்தியவாணி முத்து நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி. விஜயலதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு நல கழக செயலாளர் திரு. ஜிம் பாஷா,மாணவரணி பகுதி செயலாளர் திரு. ஜெயகாந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00