மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : கிருஷ்ணகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம், உதகை, புதுக்‍கோட்டையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 73-வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் ஒன்றியக்‍ கழகம் சார்பில் பேருந்து நிலையத்தில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. ச.கணேசகுமார் தலைமையில் நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் திருக்கோவிலூரில், நகரக்‍ கழகம் சார்பில், அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, 500க்‍கும் மேற்பட்டோருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.கே.ஜி.பி.ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியக்கழகம் சார்பில், ஆலஞ்சேரி மஹாகணபதி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு.கமலக்கண்ணன், உத்திரமேரூர் அம்மா பேரவை துணைச் செயலாளர் பண்டரிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில், குன்னூர், உதகை, குந்தா, கூடலூர் ஆகிய பகுதிகளில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அறந்தாங்கியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாவட்டச் செயலாளர் திரு. க. சிவசண்முகம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பிறந்தநாளை கொண்டாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00