மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : திண்டுக்‍கல், மதுரை, திருச்சி, ஈரோட்டில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நகரக்‍ கழகம் சார்பில், பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை கழகத்தினர் ஊர்வலமாக வந்து கொடியேற்றினர். அம்மா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.நல்லசாமி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகம், கருப்பாயூரணி ஊராட்சி கழகம் சார்பில், அம்மா பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.செ.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் விளத்தூர் திரு.வீ.அருவுகராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில், கே.கே.நகரில் உள்ள அம்மாவின் திருவுருவச் சிலைக்கு, கழகத்தினர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட கழக செயலாளர்கள் பேராசிரியர் திரு.மா.ஜெயபால், திரு.ஷ.ராஜலிங்கம், கழக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் திரு.பரமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகம், 41வது வட்டக் கழகம் சார்பில், எடமலைப்பட்டிபுதூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் திரு.சாருபாலா தொண்டைமான் தலைமையில் கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஏழை, எளிய பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் 73 வகையான மரக்‍கன்றுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு புறநகர் மாவட்டம், சத்தியமங்கலம் நகர பேருந்து நிலையத்தில், மாவட்டக்‍ கழகம் சார்பில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.ஆர். செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00