மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : பெரம்பலூர், திருவண்ணாமலை, நாமக்‍கல், திருப்பூர், நாகையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை

Feb 24 2021 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவச்சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மாவின் திருவுருச் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் திரு. குலோத்துங்கன், மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி. மைதிலி கோபிநாத் உள்ளட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலை மத்திய மாவட்டம் சார்பில் போளூர், களம்பூர், சேத்பட் உள்ளிட்ட 30-கும் மேற்பட்ட இடங்களில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீர ஆஞ்சநேயர் கோயிலில் மாண்புமிகு அம்மாவின் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. போளூர் நகர செயலாளர் திரு. ராஜசேகரன் மற்றும் களம்பூர் பேரூராட்சி செயலாளர் திரு. சந்தோஷ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் திரு. சி.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கியும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்டம் வெண்ணந்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தின் சார்பாக மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்த நாளையொட்டி வெண்ணந்தூர் வெள்ளை பிள்ளையார் கோவில் மற்றும் வெண்ணந்தூர் அண்ணா சிலை அருகே அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் திரு. என்.கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழக துணைத் தலைவரும், நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. எஸ். அன்பழகன், அம்மா பேரவை மாநில துணைத் தலைவர் திரு.ஏ.பி.பழனிவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் காங்கேயம் சாலை CTC கார்னர் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி. ஜோதிமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக பல்லடம் நகர கழகம் சார்பில் பல்லடம் பொங்காளி அம்மன் கோவில் முன்பு அம்மாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி. விஜயா, மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. பிரேம்குமார் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், மயிலாடுதுறை, திருவாளபுத்தூர், சித்தர்காடு, மணல்மேடு, ஆகிய இடங்களில் அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது மாவட்டக் கழக செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கழக நிர்வாகிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மயிலாடுதுறை நகரக்கழக செயலாளர் திரு. விக்னேஸ்வரன், ஒன்றியக் கழக செயலாளர்கள் திரு. பிரசாத், திரு. சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00