தமிழக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் - விசாகா கமிட்டி அமைப்பு
Feb 24 2021 8:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 21-ம் தேதியன்று, திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்காகச் சென்ற சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அங்கு பணியில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், டி.ஜி.பி. திரிபாதி, உள்துறைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.