புரட்சித்தலைவி அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : அ.ம.மு.க. பிரம்மாண்ட பொதுக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு

Feb 24 2021 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 73வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்‍கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்தக்‍ கூட்டத்தில் லட்சக்‍கணக்‍கான தொண்டர்கள், பொதுமக்‍கள் பங்கேற்றனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 73வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை, தாம்பரம், சண்முகம் சாலையில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு, தென்சென்னை கிழக்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில், அம்மா பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, அடையாறு போக்‍குவரத்து சந்திப்பு அருகே, தென்சென்னை கிழக்‍கு மாவட்டச் செயலாளர் நீலாங்கரை திரு.எம்.சி. முனுசாமி தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில், செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.கரிகாலன், ஆலந்தூர் பகுதிக்‍கழகச் செயலாளர் திரு.லட்சுமிபதி ஆகியோர் தலைமையில், மேளதாளம் முழங்க, திரு.டிடிவி தினகரனுக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பிறந்தநாள் பொதுக்‍கூட்டம் நடைபெறும் தாம்பரம் சண்முகம் சாலைக்‍கு வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்‍கு கழகத்தினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். விழா மேடையில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பொதுக்‍கூட்டத்தின்போது, இஸ்லாமியர்களின் தொழுகைக்‍கு இடையூறு ஏற்படாத வகையில், சிறிது நேரம் அமைதி காக்‍கப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக்‍ கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00