தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் - அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சியுரை
Feb 24 2021 8:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் என, மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புரட்சித்தலைவி அம்மாவின் 73வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை, தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், எங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்களோ அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கொடியவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாபெரும் மக்கள் கூட்டம் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சிறப்பு டி.ஜி.பி. மீது வந்துள்ளது சாதாரண புகார் அல்ல -
பெண் அதிகாரியே குற்றச்சாட்டை வைத்துள்ளதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார். தமிழக அரசு கடன் சுமையில் தள்ளாடி வருவதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது தி.மு.க. தான் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.