சின்னம்மாவை கண்டு கண்கலங்கி அன்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி - சின்னம்மா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.-தான் தேர்தலில் வெற்றி பெறும் என நம்பிக்கை
Feb 24 2021 9:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மாவை காண வேண்டும் என்று ஆவல் இன்று நிறைவேறியிருப்பதாக, மாற்றுத்திறனாளி திரு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தியாகத்தலைவி சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் சந்தித்து, தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னம்மா தன்னை அழைத்துப் பார்த்தது, தனக்கு கிடைத்த அங்கீகாரம் என குறிப்பிட்டார்.