தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம் - பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பு

Feb 25 2021 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், அறிவித்தபடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தலைநகர் சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலைக்குச் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மதுரையில், மாநகர் போக்குவரத்து பணிமனைகளான பொன்மேனி, பைபாஸ் எல்லிஸ்நகர், புதூர், கே.கே.நகர், மற்றும் புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய பணிமனைகளில் இருந்து காலை முதலே பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், மதுரையிலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படாததால், போக்குவரத்து சேவை முடங்கியது. மதுரை கோட்டத்தில் உள்ள ஆயிரத்து 400 பேருந்துகளில் 2 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடியில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 5 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் வெளியூர் செல்ல பேருந்து நிலையம் வந்திருந்தனர். இந்நிலையில், குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 320 அரசு பேருந்துகள் உள்ள நிலையில், ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் மண்டலத்தில் 293 அரசு பேருந்துகள் உள்ள நிலையில் 210க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் எடப்பாடி அணியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் வழக்கம்போல் பணிக்குச் சென்று பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00