இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி - அவரது மறைவு கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கு பேரிழப்பு என பேட்டி
Feb 26 2021 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியனின் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல், முதலில் அண்ணாநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சாலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாலன் இல்லத்தில் திரு.பாண்டியனின் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஜி.செந்தமிழன், மாவட்டக் கழக செயலாளர்கள் திரு.வ.சுகுமார் பாபு, திரு.சந்தான கிருஷ்ணன், திரு.லக்கி முருகன், திரு.எம்.சி.முனுசாமி, சேப்பாக்கம் திரு.ராஜேந்திரன், திரு.பரணீஸ்வரன்,திரு.வேதாச்சலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் திரு.தா.பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், திரு.தா.பாண்டியனின் மறைவு, கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கே பேரிழப்பு என குறிப்பிட்டார்.