கன்னியாகுமரி தொகுதிக்கு ஏப். 6-ல் இடைத்தேர்தல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Feb 26 2021 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த திரு. வசந்த குமார், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு மே மாதம் 2-ம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தெரிவித்தார்.