சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி வந்தார் ராகுல் காந்தி - எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைகொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு
Feb 27 2021 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.எல்.ஏ.க்களை பாஜக விலை கொடுத்து வாங்குவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பலகோடி ரூபாய் பணத்தை வைத்து பாஜக தேர்தலைச் சந்திப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல், அங்குள்ள வ.உ.சி. கல்லூரி அரங்கில் காங்கிரஸ் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ராகுல், மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைகொடுத்து வாங்குவதாக குற்றம்சாட்டினார். பல கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு பாஜக தேர்தலை சந்திப்பதாகக் தெரிவித்த ராகுல், ஜனநாயக அமைப்புகளை அக்கட்சி சீர்குலைத்து வருவதாகக் குறிப்பிட்டார். நாம் இருவர், நமக்கிருவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆட்சி புரிவதாக தெரிவித்த ராகுல்காந்தி, பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால், காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.