அண்ணா பல்கலைக்‍கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை அறிக்‍கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்‍கக்‍ கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 27 2021 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அண்ணா பல்கலைக்‍கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்‍கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்‍கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்‍கழக துணைவேந்தர் சுரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்‍கக்‍கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரப்பா தாக்‍கல் செய்த மனு, இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு மட்டுமே அதிகாரமுள்ளதாக சுரப்பா தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. மேலும், ஏப்ரலில் தனது பணிக்காலம் முடிய உள்ள நிலையில், விசாரணை ஆணைய பதவி காலம் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை மீது உத்தரவு பிறப்பிக்கப்படாது என தமிழக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்‍கப்பட்டதுடன், துணைவேந்தருக்கு எதிராக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம், விசாரணை ஆணையத்தின் அறிக்‍கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்‍கக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததுடன், அண்ணா பல்கலைக்கழகத்தின் நலனை கருதி சுமூக தீர்வு காணவும் அறிவுறுத்தியது. இதையடுத்து வழக்‍கு விசாரணை மார்ச் 15ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00