இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்‍கம் - அரசியல் கட்சியினர், பொதுமக்‍கள் இறுதி அஞ்சலி

Feb 27 2021 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொந்த ஊரில் நல்லடக்‍கம் செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று அதிகாலை, அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி டேவிட் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தா.பாண்டியன் உடலுக்‍கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் திரு.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வெங்கடேசன் உட்பட அரசியல் கட்சியினர், பொதுமக்‍கள், மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, தா. பாண்டியன் உடல், டேவிட் பண்ணையில் உள்ள தோட்டத்தில் நல்லடக்‍கம் செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00