எடப்பாடி அரசை மத்திய அரசு ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - தமிழ்ப் பண்பாட்டை மத்திய அரசு இழிவாக நினைப்பதாக கண்டனம்

Feb 27 2021 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசை மத்திய அரசு ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாகவும், தமிழக அரசும் அடிமை அரசாக உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தூத்துக்‍குடியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல், அங்குள்ள வ.உ.சி. கல்லூரி அரங்கில் காங்கிரஸ் வழக்‍கறிஞர்களுடன் கலந்துரையாடினார். பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ராகுல், மாற்றுக்‍ கட்சி எம்.எல்.ஏ.க்‍களை விலைகொடுத்து வாங்குவதாக குற்றம்சாட்டினார். பல கோடி ரூபாய் பணத்தை வைத்துக்‍ கொண்டு பாஜக தேர்தலை சந்திப்பதாகக்‍ தெரிவித்த ராகுல், ஜனநாயக அமைப்புகளை அக்‍கட்சி சீர்குலைத்து வருவதாகக்‍ குறிப்பிட்டார். நாம் இருவர், நமக்‍கிருவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆட்சி புரிவதாக தெரிவித்த ராகுல்காந்தி, பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால், காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே பிரச்சாரம் செய்த திரு.ராகுல் காந்தி, தமிழ் பண்பாட்டை மிகவும் இழிவாக நினைக்கும் அரசாக மத்திய அரசு உள்ளதாகக்‍ குற்றம் சாட்டினார். தமிழக அரசு அடிமை அரசாக உள்ளதாகவும், மத்தியில் உள்ள மோடி அரசு ரிமோட் மூலம் தமிழக அரசை இயக்கிக் கொண்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00