பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய பயங்கர விபத்து - பலி எண்ணிக்‍கை 5ஆக உயர்வு

Feb 28 2021 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

வேப்பூர் புது காலனியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி தனம், தனது மகன் சக்‍திவேல் உட்பட குடும்பத்தினர் 6 பேருடன் கொளப்பாடி என்ற இடத்திற்குச் சென்றுவிட்டு, மீண்டும் வேப்பூர் நோக்கி இரு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மேலும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தனம் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சக்திவேல், மற்றும் தமிழ்நிலவன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சக்‍திவேல் உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்‍கை 5ஆக உயர்ந்துள்ளது. கோவில்பாளையம் சரவணன் என்பவர் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00