நாகர்கோவிலில் அம்மா பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் கட்டுரைப்போட்டி
Feb 28 2021 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 73-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அ.ம.மு.க. சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் திரு.ஜூலியஸ் ஏற்பாட்டின்பேரில், சமூகநீதி காத்த வீராங்கனை என்ற தலைப்பில், நாகர்கோவிலில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கேடயங்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.பி. செந்தில் முருகன், இணைச் செயலாளர் திருமதி. அம்மு ஆன்றோ ஆகியோர் கலந்துகொண்டனர்.