நாட்டில் சிறு குறு தொழில்கள் அனைத்தையும் பிரதமர் மோடி அழிக்கப் பார்க்கிறார் - நாடு முழுவதும் அதிகரித்துவரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம்? : ராகுல் காந்தி கேள்வி

Feb 28 2021 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் அதிகரித்துவரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்‍கு யார் காரணம்? என்று சொல்லவில்லை என திரு.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி, இரண்டாவது நாளான இன்று, பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது,கல்விமுறையில் ஒரு கொள்கையை வகுப்பதற்கு முன்பு மாணவர்களிடமும், ஆசிரியப் பெருமக்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்று குறிப்பிட்ட திரு.ராகுல் காந்தி, ஆனால் இவை நடப்பதே இல்லை என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் திரு.ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். பூரண கும்ப மரியாதையுடன் திரு.ராகுல் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவில் வெளியே காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள இளநீர் கடை ஒன்றில் இளநீர் பருகினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இடையே உரையாற்றிய அவர், நாடு முழுவதும் சிறு,குறு தொழில்களை மோடி அழித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் பொதுமக்‍களிடையே உரையாற்றிய திரு.ராகுல் காந்தி, நாட்டில் சிறு குறு தொழில்கள் அனைத்தையும் மோடி அழிக்‍கப் பார்ப்பதாகக்‍ குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் பொம்மை போல தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருவதாவவும், லஞ்ச லாவண்யம் இருப்பதன் காரணமாக மோடிக்கு அவர் தலை வணங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00