செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் உயிரிழப்பு : ஏரியைச் சுற்றிப் பார்க்க சென்றபோது விபரீதம் - குழந்தைகளின் உடல்களை தேடும் பணி தீவிரம்

Feb 28 2021 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்க்க சென்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த, குன்றத்தூரைச் சேர்ந்த உஸ்மான், என்பவர் தனது மகள் அர்ச்சனா மற்றும் மகன் சுசிலுடன், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க சென்றார். செம்பரம்பாக்கம் ஏரியின் சைனா கோபுரம் அமைந்துள்ள பகுதியில், மூவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தைகள் இருவரும் ஏரியில் தவறி விழுந்தனர். பிள்ளைகளை காப்பாற்ற உஸ்மானும் தண்ணீரில் குதித்தார். ஏரியில் தத்தளித்துக் கொண்டிருந்த உஸ்மானை கண்ட அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றினர். உஸ்மானை கரைக்கு கொண்டு வந்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தண்ணீரில் மூழ்கிய குழந்தைகள் அப்சனா, சுசில் ஆகிய இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் தண்ணீரில் மூழ்கிய, உஸ்மானின் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00