நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் முன் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை - மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

Mar 2 2021 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராடும் விவசாயிகளுடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்குவதற்கு முன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 100-வது நாளை நெருங்கி வருகிறது. 97-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதனிடையே, விவசாயிகளின் போராட்டம், அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் தாக்‍கத்தை ஏற்படுத்தியது. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், வரும் 8-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகளுடன் 12-ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00