சென்னை மடிப்பாக்கத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்த தேமுதிக வட்டச் செயலாளர் கைது
Mar 2 2021 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மடிப்பாக்கத்தில், கடத்தல் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த தேமுதிக வட்டச் செயலாளரை போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கத்தில் வசித்து வரும் தேமுதிக வட்டச் செயலாளரான சரத்குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மேனகா என்பவரிடம், கடத்தல் தங்கத்தை குறைந்து விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, 16 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி தங்கத்தை வாங்கித் தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்டவர், துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.