மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை தர மேம்பாட்டு மையமாக அறிவிப்பு
Mar 2 2021 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையை, தர மேம்பாட்டு மையமாக அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆதிபராசக்தி குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தரம் உயர்த்தியதற்கான சான்றிதழை, இந்திய தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.