கடலூரில் ஒருதலைக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : மாணவியை கத்தியால் தாக்கி தன்னை கிழித்துக்கொண்ட இளைஞர்
Mar 2 2021 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூரில், ஒருதலைக் காதலால், கல்லூரி மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு, அதே கத்தியால் இளைஞர் ஒருவர் தன்னையும் கத்தியால் கிழித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் கல்லூரியில், அரியலூரைச் சேர்ந்த புனிதா என்ற மாணவியை, திருச்சியைச் சேர்ந்த சேவியர், ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை அப்பெண் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஆத்திரமடைந்த சேவியர் அந்த மாணவியை கத்தியால் தாக்கியதுடன், தன்னையும் அதே கத்தியால் கிழித்து கொண்டார். இதில் மாணவிக்கு கழுத்திலும் கையிலும் காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.