சிறப்பு டி.​ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்‍கு - சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. முத்தரசி தலைமையிலான விசாரணை குழு புகாரளித்த பெண் எஸ்.பி.யிடம் விசாரணை

Mar 2 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண் எஸ்.பி.யிடம், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழக சட்டம், ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவர்மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்க வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை செங்கல்பட்டு டோல்கேட் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்திய எஸ்.பி கண்ணன் மற்றும் ஐ.ஜி ஒருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எஸ்.பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பி.,முத்தரசி தலைமையிலான 6 பேர் கொண்ட விசாரணை குழுவினர், புகார் அளித்த பெண் எஸ்.பி.யிடம் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00