பா.ஜ.க. - எடப்பாடி தரப்பு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி : மத்திய இணை அமைச்சா்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் சென்னை வருகை

Mar 2 2021 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
எடப்பாடி தரப்பினருக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் திரு. வி.கே.சிங் சென்னை வந்துள்ளார்.

எடப்பாடி தரப்பிடம் அதிக இடங்களை கேட்டு பா.ஜ.க. நிர்ப்பந்தம் செய்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 20 தொகுதிகள் மட்டுமே வழங்க எடப்பாடி தரப்பு சம்மதித்த நிலையில், கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, பா.ஜ.க கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொகுதி பங்கீட்டை தொடர, பாஜக தமிழக பொறுப்பாளா்களான மத்திய இணை அமைச்சா்கள் திரு. கிஷன் ரெட்டி, திரு. வி.கே.சிங் ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் திரு. வி.கே. சிங்கிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00