சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி : மிக குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க நினைக்கும் திமுக

Mar 2 2021 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மிகக்‍குறைந்த எண்ணிகையில் தொகுதிகளை கொடுப்பதாக திமுக தெரிவித்ததால், மார்க்‍சிஸ்ட் கட்சி கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து அக்‍கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்‍ கட்சிகளுக்‍கு மிகு குறைந்த எண்ணிக்‍கையில் இடங்களை ஒதுக்‍கவும் சிறிய கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிடவும் திமுக நிர்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த காலங்களில் இரட்டை இலக்‍குகளில் ஒதுக்‍கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்‍கு இந்த முறை ஒற்றை இலக்‍குகளில் தொகுதிகளை ஒதுக்‍க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக- மார்க்‍சிஸ்ட் கட்சிகளுக்‍கு இடையே இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ​​பேச்சுவார்த்தையின் போது மார்க்‍சிஸ்ட் கட்சியினர் கேட்ட தொகுதிகளை காட்டிலும் மிக குறைந்த அளவில் தொகுதிகளை தருவதாக திமுக தரப்பில் தெரிவிக்‍கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்‍சிஸ்ட் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேச அக்‍கட்சித் தலைவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00