ரோட்டரி கிளப் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு பேரணி : குடகுமலை வழியாக காவிரி பூம்புகார் வரை கார் பேரணி

Mar 2 2021 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நதிகளை காப்போம் என்பதை மைய கருத்தாக கொண்டு, ரோட்டரி கிளப் சார்பாக சென்னையில் தொடங்கி குடகுமலை வழியாக காவிரி பூம்புகார் பட்டனம் வரையிலான கார் பேரணி இன்று சென்னையில் தொடங்கியது.

ரோட்டரி கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு சமூக கருத்தை மையமாக கொண்டு இந்த பேரணி தொடர்ந்து நடைபெறுவது வழக்‍கம். அதன்படி, இந்த ஆண்டு நதிகளை காப்போம் என்பதை மையமாக கொண்டு, ஆயிரத்து 873 கிலோ மீட்டர் தொலைவு பேரணி இன்று தொடங்கியது. 6 பகல், 5 இரவு என இந்த பேரணி நடைபெறவுள்ளதாக இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மரம் வளர்க்க வேண்டும், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ன பொதுமக்களுக்‍கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்துவதாக ரோட்டரி கிளப்பின் சார்ட்டர் தலைவர் திருமதி. சிவபாலதேவி ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில். ரோட்டரி கிளப் சார்ட்டர் தலைவர் திருமதி. சிவபாலதேவியின் மகனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு. பரணீஸ்வரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சுகுமார் பாபு, கலை மாமணி நல்லி ஐயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00