சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 702 பறக்கும் படைகள் அமைப்பு - ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Mar 2 2021 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரு தொகுதிக்‍கு 3 பறக்‍கும் படைகள் வீதம், 234 சட்டமன்ற தொகுதிகளுக்‍கு 702 பறக்‍கும் படைகள் அமைக்‍கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்‍கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், மே 2-ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், தலா 3 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும், ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனிகள் துணை ராணுவப் படை கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, 45 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளதாகவும், ஒருசில தினங்களில் 15 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் தமிழகம் வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00