திருப்பத்தூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து
Mar 2 2021 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் அருகே, தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அனேரி தென்றல் நகர் பகுதியில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், லாரி உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.