அ.ம.மு.க.வினர் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்-நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மனுக்களை சமர்ப்பித்து வரும் கழகத்தினர்

Mar 7 2021 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் போட்டியிட இறுதி நாளான இன்றும், கழகத்தினர், ஆர்வத்துடன் விருப்ப மனுக்‍களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனுக்‍கள், கடந்த 3ம் தேதிமுதல் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்‍க நாளன்றே ஆயிரத்து 300க்‍கும் மேற்பட்டோர் மனுக்‍களைப் பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து, 4-வது நாளான நேற்றும், மகளிர் உட்பட ஏராளமானோர், ஆர்வத்துடன் விருப்ப மனுக்‍களைப் பெற்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்‍கவும் செய்தனர். விண்ணப்பங்களைப் பெற்றுக்‍கொள்ளவும், பூர்த்தி செய்து வழங்கவும் இன்று கடைசிநாள் என்பதால், தலைமை அலுவலகத்தில் கழகத்தினர் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்.

இதனிடையே, நாளையும், நாளை மறுதினமும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், விண்ணப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00