சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் - சாதனைப் படைத்த பெண்கள் விருதுகள் வழங்கி கவுரவிப்பு

Mar 7 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில், சென்னை தியாகராய நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் நலச்சங்கத் தலைவர் திருமதி. கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, ஆச்சி மசாலா நிறுவனர் திரு. பத்மசிங் ஐசக், கனரா வங்கி பொது மேலாளர் திரும‌தி. கனிமொழி, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி பொது மேலாளர் திருமதி. சித்ரா கே.அலை, அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் திரு. தேவ் ஆனந்த் மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். சமூகத்தில் சிறந்து விளங்கும் பெண்களையும், சமூக அக்கறையோடு செயல்படும் பெண்களையும் அங்கீகரிக்கும் விதமாக இதில் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவர் திருமதி. கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், அடுத்த சர்வதேச பெண்கள் தினத்திற்குள், குறைந்தது ஆயிரம் பெண்களையாவது தொழில் முனைவோராக உருவாக்க வேண்டுமென்பது தங்களுடைய நோக்கம் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00