நோய்த் தாக்கத்தை தடுக்க, மக்களிடம் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கொரோனா வேகமாகப் பரவி வருவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
Apr 8 2021 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் குறித்து வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை என்றும், ஊரடங்கு நடைமுறையும் அமலில் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வழக்கு ஒன்றில் காணொலி மூலம் மூலம் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.விஜய் நாராயணனிடம் தலைமை நீதிபதி திரு.சஞ்ஜிப் பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். நோய்த் தாக்கத்தை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய்த்தடுப்புக்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை - ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்றும், இது கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும், தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.