தேர்தல் முன்விரோதம் காரணமாக, திமுக - அதிமுகவினர் மோதல் : அரிவாளுடன் மோதிக்கொண்டதில் 5 பேர் காயம்

Apr 8 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் முன்விரோதம் காரணமாக, நாகையில் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் அரிவாளுடன் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதலால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நாகப்பட்டினம் ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் திமுகவினர் இடையே வாக்குப்பதிவின்போது தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த முன் விரோதம் காரணமாக நேற்று அவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. நாகை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அப்போது காயமடைந்தவர்களை பார்க்க வந்த உறவினர்களை மற்றொரு தரப்பினர் மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டினர். அங்கிருந்த நோயாளிகளும் பொதுமக்களும் அலறி அடித்து நாலாபுறமும் அச்சத்தில் ஓடினர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாகை வெளிப்பாளையம் போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ஆரியநாட்டுதெரு மற்றும் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00