சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி - களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை முகாம்
Apr 8 2021 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றுமுதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்கள் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யயப்படும். இந்தபரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.