கொரோனா பாதித்த தெருக்களை மூடி மதுரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை - 20 வார்டுகளில் தொற்று அதிகரித்திருப்பதாக தகவல்
Apr 8 2021 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வங்கி மூன்று தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி தொடர்ந்து 3 தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வங்கிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 3 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் 18 தெருக்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லவி நகர், திருப்பாலை, கே.கே.நகர், விளாங்குடி உள்ளிட்ட 18 பகுதிகளில் உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டு, சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.