கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை கொட்டிய 3 கேரளா லாரிகள் பறிமுதல் - ஜேசிபி இயந்திரத்தையும் தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர்

Apr 8 2021 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியிலுள்ள விவசாய தோட்டத்திற்குள் கொட்ட வந்த 3 லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான செம்மனாம்பதி அருகே இரட்டைமடை தோட்டம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில வருடங்களாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகளை பெரிய அளவில் குழிதோண்டி கொட்டி மூடப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அதிக அளவில் லாரிகள் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு வந்ததால் அப்பகுதி விவசாயிகள் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, விவசாயிகள் ஒன்று சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது சஞ்சய் ஆண்டனி தோட்டத்தில் 3 டிப்பர் லாரிகள் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை கொட்டிக்கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், 3 டிப்பர் லாரிகள் மற்றும் குழிதோண்டுவதற்கு பயன்படுத்தும் ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை சிறைப்பிடித்தனர். லாரி ஓட்டுநர்கள் உட்பட 10 பேர் தப்பி ஓடினர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருச்சூர் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்‍ கழிவுகள் என்பது தெரியவந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00