சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது - நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Apr 8 2021 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் 2019ம் ஆண்டில் முடிவடைந்துவிட்டது. ஆனால், இந்த சுங்கச்சாவடிகளில் இன்னமும் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி திரு. சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என கருத்து தெரிவித்தனர். அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.