ஓசூர் அருகே பந்தல் போடும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி - அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையின் போது விபரீதம்

Apr 8 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓசூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையின் போது மின்சாரம் தாக்‍கியதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறவிருந்தது. இதற்காக கட்டுமான பகுதியின் அருகிலேயே பந்தல் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பந்தல் அமைக்க பள்ளம் தோண்டியபோது, அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த மின் கம்பியில், இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால் இரும்பு கம்பி மூலமாக மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கட்டுமான பணியின் பூமி பூஜையின் போது 4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00