கள்ளக்குறிச்சியில் பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினரிடையே மோதல் : 15 பேர் கைது - பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு

Apr 8 2021 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன.

ரிஷிவந்தியத்தை அடுத்த மாடாம்பூண்டி கிராமத்தில், நேற்று இரவு தனியாக நடந்து சென்ற பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள், 3 இளைஞர்களின் வீடுகளில் கற்களை வீசி தாக்கி சேதப்படுத்தினர். இதனால், இளைஞர்களின் உறவினர்களுக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலப்பந்தல் போலீசார், இருத்தரப்பையும் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00