பென்னாகரத்தில் மயக்‍க ஊசி செலுத்தி பிடிக்‍கப்பட்ட ஒற்றை யானை - உரிய சிகிச்சை அளிக்‍காமல் வனப்பகுதியில் விடப்பட்டதால் சர்ச்சை

Apr 8 2021 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஒற்றை காட்டு யானைக்‍கு உரிய சிகிச்சை அளிக்‍காமல் வனப்பகுதியில் விடப்பட்ட சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 15 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை, நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் கொண்டு விடப்பட்டது. இதற்கு கூடலூர் பகுதி மக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இரவோடு இரவாக, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது. யானையின் வாயில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் லாரியில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டது. இதனால் யானையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00