சென்னையில் மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் வைக்‍கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

Apr 8 2021 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் வைக்‍கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன், 24 மணி நேரமும் சுழற்சி முறையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சட்டமன்றத் தேர்தல் வாக்‍குப்பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மையங்களில் வைக்‍கப்பட்டுள்ளன. இதன்படி, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்‍கம், ஆயிரம் விளக்‍கு, எழும்பூர், அண்ணா நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்‍கிய வாக்‍குப்பதிவு இயந்திரங்கள், லயோலா கல்லூரி மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், விருகம்பாக்‍கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்‍குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்‍கழகத்தில் வைக்‍கப்பட்டுள்ளன. சேப்பாக்‍கம் - திருவல்லிக்‍கேணி, துறைமுகம், ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர், ராயபுரம் ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்‍குகள் அடங்கிய மின்னணு வாக்‍குப்பெட்டிகள், இராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00