திருவெறும்பூரில் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வருவாய் ஆய்வாளர் ஊதியம் தராமல் அலைக்கழிப்பதாக புகார்
Apr 8 2021 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். திருவெறும்பூர் தேர்தல் அலுவலரும், வருவாய் ஆய்வாளருமான திரு.மூர்த்தி, ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாகக்கூறி பணிக்கு அழைத்துச் சென்றதாகவும், பணி முடிந்ததும் ஊதியத்தை கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.