நாகை மாவட்டத்தில் வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு பிசிஆர் சோதனை
Apr 8 2021 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வேளாங்கண்ணியில் உள்ள சுற்றுலாத்தலமான புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வரும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகளுக்கு, பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவோரும், கொரோனா சோதனை செய்த பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.