திருநெல்வேலியில் தி.மு.க-பா.ஜ.க பணப்பட்டுவாடா - மறுவாக்குப்பதிவு நடத்த புதிய தமிழகம் கட்சி கோரிக்கை
Apr 8 2021 8:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் அதிகமாக பணபட்டுவாடா செய்ததால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. சிவகுமார் நெல்லை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் கூறும்போது தொடர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என தெரிவித்தார்.