நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை : முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Jul 25 2021 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 110.95 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு இரண்டாயிரத்து 33.45 கன அடி நீர்வரத்துள்ள சூழலில், அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 398.60 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது. இதே போன்று 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 119.16 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.60 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேப் போன்று, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்திலும் பரவலாக பெய்த மழையால் முக்கிய அணைகளான கடனாநிதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றால மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேப் போன்று, ஐந்தருவி, பழைய குற்றலாம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் கொரோனா பரவல் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கடைகள் வீதிகள் அனைத்தும் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00